புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் 27ஆவது பட்டமளிப்பு விழா வரும் 23ஆம் தேதி நடக்கிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாணவ - மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் புதுச்சேரி காவல் துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலர் அஷ்வின் குமார், மாவட்ட ஆட்சியர் அருண், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். குடியரசுத் தலைவர் செல்லும் சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: 'திமுகவிற்கு தமிழர்கள், இஸ்லாமியர்கள் பற்றி கவலை இல்லை...!'