ETV Bharat / bharat

சுதந்திர தினத்தை காஷ்மீர் மக்கள் நிம்மதியாக கொண்டாடுவார்கள் - குடியரசுத் தலைவர் - president speech about independence day

டெல்லி: நாடு முழுவதும் நாளை 73ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருப்பதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை
author img

By

Published : Aug 14, 2019, 9:13 PM IST

நாட்டு மக்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு 73ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். சுதந்திர தினம் என்பது நாட்டு மக்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்றும், நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.

நாடு இன்று சந்திக்கும் சவால்களை, மகாத்மா காந்தி அன்றே தெரிந்து வைத்திருந்தார். தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்கள் பயனடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளிலுள்ள மக்களுக்குக் கிடைத்த அதே உரிமைகள், அதே சலுகைகள், அதே வசதிகள் காஷ்மீர் மக்களுக்குக் கிடைக்கும் என்றார்.

மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பானதாகும் என்றும், இந்தக் கோடையின் தொடக்கத்தில், இந்திய மக்கள் 17ஆவது பொதுத் தேர்தலில் பங்கேற்றனர். இது மனித வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயக பயிற்சியாகும். இதற்காக நான் வாக்காளர்களை வாழ்த்த வேண்டும் என்று உரையாற்றினார்.

Intro:Body:

prseident speech about independence day

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.