ஏழு வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரக உயர் ஆணையர்கள், அலுவலகப் பிரதிநிதிகளுடன் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி வாயிலாக டெல்லியில் இன்று சந்திப்பு நடத்தினார்.
இந்தச் சந்திப்பில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரக உயர் அலுவலர்கள், ஆணையர்கள் சமர்ப்பித்த அறிமுகச் சான்றிதழ்களை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தூதர் சோ ஹுய் சோல், செனகல் குடியரசின் தூதர் அப்துல் வஹாப் ஹைதரா, டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் உயர் ஆணையர் ரோஜர் கோபவுல், மொரீஷியஸ் குடியரசின் உயர் ஆணையர் சாந்தி பாய் ஹனுமன்ஜி, ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையர் பாரி ராபர்ட் ஓ'பாரெல், கோட் டி ஐவோயர் குடியரசின் தூதர் எம்.என்.ட்ரை எரிக் காமில், ருவாண்டா குடியரசின் உயர் ஆணையர் ஜாக்குலின் முகாங்கிரா உள்ளிட்டோர், தங்கள் சான்றுகளை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்.
இந்தச் சந்திப்பின் போது தூதர்களோடு உரையாடிய குடியரசுத் தலைவர் கோவிந்த், 'உலகளாவிய சமூகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும்சவாலாக அமைந்துள்ள கோவிட்-19 பெருந்தொற்றுநோய்க்கு எதிரானப்போரில், நாம் எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்.
இதனை உலகளவில் எதிர்த்துப் போராடுவதில், சக நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
கரோனா அச்சுறுத்தல் தந்திருக்கும் சவால்களை சமாளிக்கவும், நாடுகளின் இயல்பான சந்திப்புகளை அதன் செயல்பாடுகளை ஒரு புதுமையான முறையில் செயல்படுத்தவும் நவீன தொழில்நுட்பம் உலகிற்கு உதவியுள்ளது. டிஜிட்டல் முறையில் இயக்கப்பட்ட அறிமுகச்சான்றிதழ் விழாவில், டெல்லியில் உள்ள ராஜதந்திர சமூகத்துடன் இந்தியா முன்னெடுத்து இருப்பதன் மூலம் இந்த நாள் சிறப்புப் பெற்றுள்ளது. இந்தியா தனது மக்கள் மற்றும் உலகின் முன்னேற்றத்திற்கான டிஜிட்டல் பாதையின் வரம்பற்ற சாத்தியங்களைப் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது.
இன்றைய நிகழ்வு இந்தியாவின் டிஜிட்டல் ராஜதந்திர முயற்சிகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது’எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Mr Abdoul Wahab Haidara, Ambassador of Senegal, presented his credentials to President Kovind. 🇮🇳🇸🇳 pic.twitter.com/EbuOZ1Sxq8
— President of India (@rashtrapatibhvn) May 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mr Abdoul Wahab Haidara, Ambassador of Senegal, presented his credentials to President Kovind. 🇮🇳🇸🇳 pic.twitter.com/EbuOZ1Sxq8
— President of India (@rashtrapatibhvn) May 21, 2020Mr Abdoul Wahab Haidara, Ambassador of Senegal, presented his credentials to President Kovind. 🇮🇳🇸🇳 pic.twitter.com/EbuOZ1Sxq8
— President of India (@rashtrapatibhvn) May 21, 2020
இதையும் படிங்க : 'கரோனாவை விட ஆம்பன் புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' - மம்தா பானர்ஜி