குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு வருகை தந்தார். அவரை முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில டிஜிபி உள்ளிட்டோர் வரவேற்றனர். இவர்களோடு மேயர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
ஹைதராபாத்தில் வரும் 22ஆம் தேதி அன்று தெலங்கானா மாநில இந்திய செஞ்சிலுவை சமூகத்தின் (Indian Red Cross Society of Telangana State) செயலியை வெளியிடுவதற்காக ராம்நாத் கோவிந்த் வந்திருக்கிறார். இதனால் குடியரசுத் தலைவர் வரும் 28ஆம் தேதிவரை தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராஷ்டிரபதி பவனில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹைதராபாத் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, தொடர்ந்து வரும் 23ஆம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். அதே நாளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை, நினைவிடத்திற்கு செல்லவிருக்கிறார்.
இதையும் படிங்க: சமகால சவால்களை எதிர்கொள்ள காந்திய கொள்கை அவசியம் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்