குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில், ''இத்திருவிழா தீமைக்கு எதிரான நல்ல வெற்றியின் கொண்டாட்டமாகும். இந்த விழா நேர்மை, உண்மைத் தன்மையுடன் உழைக்கத் தூண்டுகிறது. நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்'' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டில், ”உலகம் முழுவதும் துர்கா பூஜை முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இச்சிறப்பான தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலிமை, துணிவு, கருணை ஆகிய பண்புகள் கொண்ட துர்கை அம்மனின் அருளை சமூகத்தின் நலனுக்காக வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.