டெல்லியில் கர்ப்பிணி ஒருவர், தனது கணவர் வரதட்சணையாக மோட்டார் இருசக்கரவாகனம் வாங்கித் தருமாறு வற்புறுத்தினார் என்றும்; அடிக்கடி, தனது கருவை கலைக்குமாறு தொந்தரவு செய்து, கர்ப்பத்தை கலைக்க மாத்திரைகள் கொடுத்து கட்டாயப்படுத்தியதாகவும் புகார் கூறினார்.
மேலும் தனது கணவர் தொலைபேசியில் தகாத முறையில் பேசியதாகவும், ஜூன் 23 அன்று தன்னை வாய்மொழியாக முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்த பின்னர், இரண்டாவது திருமணத்திற்குத் திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். இச்சம்பவத்துக்கு கர்ப்பிணியின் மாமியாரும் துணைபோய் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.