கடந்தாண்டு ஒன்பிளஸ் டிவி க்யூ 1 மற்றும் ஒன்பிளஸ் டிவி க்யூ 1 ப்ரோ டிவி மாடல்கள் ரூ.69,900 தொடக்க விலையில் அறிமுகமாகின. அதுபோல இல்லாமல் குறைந்த விலையில், இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, வருகிற ஜூலை 2ஆம் தேதி, இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி சிரீஸை, ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
வு(Vu) மற்றும் சியோமி உள்ளிட்ட பிராண்டுகளைபோல, மிட் ரேஞ்ச் மற்றும் என்ட்ரி-லெவல் டிவி சாதனங்களை வெளியிட்டு, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒன்பிளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரியல்மி நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் பட்ஜெட் டிவி பிரிவில் நுழைந்தது. அந்த வகையில் வெவ்வேறு திரை அளவுகளில் புதிய ஸ்மார்ட் டிவிக்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது.
இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிக்களின் முன்பதிவு அமேசான் தளத்தில் நடைபெறும்.
இப்போது இந்த டிவியை புக் செய்தால், 3000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆண்டுகள் வாரண்டியை 1000 ரூபாய் விலையில் வாங்க முடியும்.
இதையும் படிங்க: சென்னையில் இன்று மட்டும் கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு!