முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) ஆகஸ்ட் 10ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையில் அவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் பிரணாப் முகர்ஜிக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் (ஆக்ஸ்ட் 27) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார். அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தனர்.