Latest National News இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் நான் பசுமை பட்டாசுகளையும் பயன்படுத்தமாட்டேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களிடம் பசுமை பட்டாசுகள் வேண்டாம் என்றே கூறுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று கூறினார்.
மேலும், "கண்டிப்பாக நீங்கள் பட்டாசுகள் வெடித்தே ஆக வேண்டும் என்றால் பசுமை பட்டாசுகளை பயன்படுத்துங்கள்" என்றார். முன்னதாக, கடந்த வாரம் சனிக்கிழமையன்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் குறைந்த புகை வெளியாகும் பசுமை பட்டாசுகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்தது தொடர்பான கேள்விக்கு, "உச்சநீதிமன்றமே ஆரே பகுதியில் மரங்களை வெட்டத் தடை விதித்துள்ளதால், அதைப் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. ஒரு மரத்தை வெட்டினால் ஐந்து மரங்களை நட வேண்டும் என்ற கொள்கை காரணமாகப் பசுமை பகுதிகள் அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் இதுவரை இருந்த 270 நாட்களில் 165 நாட்களில் நல்ல காற்றுள்ள நாட்கள் (Good air days) ஆக அமைந்துள்ளது" என்றார்.
இதையும் படிக்கலாமே: மரங்களை வெட்டுவதற்கு ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்!