குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று பார்வையிட்டார். நாட்டின் இரும்பு மனிதார் என்று பலராலும் அழைக்கப்படும் வல்லபாய் பட்டேல் சிலையை பார்வையிட்டபோது எடுத்த புகைப்படத்தை தேவகவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பட்டேல் சிலையை தேவகவுடா பார்வையிட்டது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதுதொடர்பான தனது ட்வீட்டில், ‘முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒற்றுமையின் சிலையை பார்வையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டில் மட்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை 23 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: நிரம்பி வழியும் சர்தார் சரோவர் அணை; சம்பந்தப்பட்ட அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!