இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
’இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக போர்ச்சுகீசிய பிரதமர் ஆண்டோனியோ கோஸ்டா, வரும் டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் இந்தியா வருகிறார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ள அமைப்புக் குழு கூட்டத்தில் கோஸ்டா பங்கேற்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி - போர்ச்சுகீசிய பிரதமர் கோஸ்டா ஆகிய இருவரும் டிசம்பர் 19ஆம் தேதி சந்திக்க இருக்கின்றனர். அப்போது, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும், இந்தியா - போர்ச்சுகல் இடையிலான உயர் மட்ட அரசியல் பரிமாற்றங்கள், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு பிரதமர்களும் விவாதிக்க உள்ளனர்.
அக்டோர் மாதம் 6ஆம் தேதி போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற பின், முதல் முறையாக ஆண்டோனியோ கோஸ்டா இந்தியா வருகிறார்.
இதையும் படிங்க: குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்!