புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏப்ரல் 22ஆம் தேதிதான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மார்ச் 22ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே 6ஆம் தேதி வரையில், நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த உத்தரவை பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் பிறப்பித்துள்ளார். 2019-20ஆம் ஆண்டிற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 0413 - 2654500 மற்றும் 06382349524 என்ற உதவி எண்ணிற்கு அழைக்கலாம்.
மேலும், admissions.pu@pondiuni.edu.in என்ற ஈ-மெயில் மூலமாகவும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தை www.pondiuni.edu.in என்ற புதுச்சேரி பல்கலைக்கழத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.