ETV Bharat / bharat

என் மீதான குற்றத்தை அதிமுக நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் - காங்., எம்.எல்.ஏ - குற்றத்தை அதிமுக நிரூபித்தால்

புதுச்சேரி: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன், தனது மீது சுமத்தியுள்ள புகார் பொய் என்றும் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார் என காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி
சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி
author img

By

Published : May 23, 2020, 10:46 PM IST

புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு சாராய வடிகால் அலையிலிருந்து ஊரடங்கின்போது பத்து லட்சம் லிட்டர் சாராயம் கள்ளத்தனமாக விற்றதாக சாராய வடிகால் துறை தலைவராக உள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி மீது புகார் ஒன்றை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன் தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சாராய வடிகால் துறை தலைவர் விஜயவேணி, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன் தனது மீது சுமத்தியுள்ளது புகார் பொய் புகார் என்றும், தான் வகிக்கும் வாரிய தலைவர் பதவி மற்றும் புதுச்சேரி அரசு சாராய வடிகால் துறை மீதும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் பொய்யான புகாரை அவர் தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.

மேலும், ஆட்சி மாற்றத்திற்காக தன்னிடம் அவர் பேசினார். இது குறித்து சபாநாயகரிடம் ஏற்கனவே மணிகண்டன் மீது புகார் ஒன்றை தெரிவித்துள்ளேன். எனவே தன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த பொய் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார் என்றார்.

என் மீது அவர் சுமத்திய புகாரை உண்மை என்று நிரூபித்து விட்டால், தன் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.