புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா கிருமித் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் (ஜூன் 27) புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முதலமைச்சர் அலுவலகம் மூடப்பட்டது.
இச்சூழலில், முதலமைச்சர் நாராயணசாமி, அவரின் உதவியாளர், அலுவலர்கள், ஊழியர்கள், பாதுகாவலர்கள் என மொத்தம் 74 பேருக்கு கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூன் 29) வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜூன் 27ஆம் தேதி புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சகம், முதலமைச்சர் நாராயணசாமியை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.