ETV Bharat / bharat

புதுச்சேரி தனிமாநில அந்தஸ்து - மக்கள் நீதி மய்யத்தால் மட்டுமே முடியும் - BYTE

புதுச்சேரி: தனி மாநில அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ், என் ஆர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை நம்ப வேண்டாம், மக்கள் நீதி மய்யம் மட்டுமே அதனைப் பெற்றுத் தரும் என்று டாக்டர் சுப்ரமணியன் வாக்குறுதி அளித்துள்ளார்.

டாக்டர் சுப்ரமணியன்
author img

By

Published : Mar 30, 2019, 5:09 PM IST

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைவரும், மக்களவை வேட்பாளருமான மருத்துவர் சுப்பிரமணியம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'காங்கிரஸ் கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக உறுதி அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், தற்போது இந்த இரு கட்சிகளும் மீண்டும் அதே வாக்குறுதியை அளித்து மக்களின் வாக்குகளை பெற முயற்சித்து வருகிறது. எனவே மக்கள் சற்று சிந்திக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை நிச்சயம் பெற்றுத் தருவேன்.

மேலும், புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சி அடிக்கடி இடைத்தேர்தலை சந்திக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி மக்களின் வரிப்பணத்தை சிந்திக்காமல் கட்சியைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது' என அவர் குற்றம் சாட்டினார்.

Intro:புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து காங்கிரஸ், என் ஆர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் நம்பாதீர்கள் ,மக்கள் நீதி மையம் மட்டுமே அதனைப் பெற்றுத் தரும் புதுச்சேரி மாநில அக்கட்சி தலைவர் டாக்டர் சுப்ரமணியன் வாக்குறுதி

Body:புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் மாநில தலைவரும், பாராளுமன்ற வேட்பாளருமான மருத்துவர் சுப்பிரமணியம் அக் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த போது, புதுச்சேரியில் தனி மாநில அந்தஸ்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி ,என்ஆர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக உறுதி அளித்து வருகின்றன ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் பேசி அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை மீண்டும் அதே கோரிக்கைகளை இக்கட்சிகள் மக்களிடம் வாக்குறுதி அளித்து வருகிறது அதனால் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றவர் மக்கள் நீதி மைய கட்சி சார்பில் தான் பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநில அந்தஸ்தை நிச்சயமாக பெற்றுத் தருவேன் என்றும் தெரிவித்த அவர், புதுச்சேரியில் அடிக்கடி இடைத் தேர்தலை சந்திக்கும் சூழ்நிலையை ,ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி மக்களின் வரி பணத்தை வீணாகி வருகிறது .முதல்வர் நாராயணசாமி, முதல்வர் ஆவதற்காக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜான் குமாரை பதவி வைத்து அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் காமராஜர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் பாராளுமன்ற வேட்பாளராக உள்ளார் இதனால் காமராஜ் தொகுதி இடைத்தேர்தலுக்கு சந்தர்ப்பத்தை அக்கட்சி உருவாக்கியுள்ளது எனவே காங்கிரஸ் கட்சி மக்களின் வரி பணத்தை பற்றி சிந்திக்காமல் கட்சியை பற்றிய சிந்திப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது எனவே புதுச்சேரி மக்கள் இதனை சிந்தித்து பாராளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சின்னத்திற்கு ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்

Conclusion:புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து காங்கிரஸ், என் ஆர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை நம்ப வேண்டாம் மக்கள் நீதி மையம் மட்டுமே அதனைப் பெற்றுத் தரும் புதுச்சேரி மாநில அக்கச்சி தலைவர் டாக்டர் சுப்ரமணியன் வாக்குறுதி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.