குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கடந்த சில நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுவீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அச்சட்டம் பற்றி பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள குறிஞ்சி நகரில் வீடுவீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்திற்கு பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய இணை அமைச்சர், ”காங்கிரஸும் இடதுசாரிகளும்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தைத் தூண்டுகிறார்கள் . இச்சட்டத்தை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை தெளிவாகப் படித்து புரிந்துகொண்டு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமைதியான முறையில் விவாதத்திற்கு வரலாம். மாணவர்களை சிலர் தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு வழங்க வைத்திருந்த பணம் மாயம் -போலீசார் விசாரணை