மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் இடையிலான சந்திப்பு அம்மாநில அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளம்புயுள்ளது.
மகாராஷ்டிரா மாநில பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸை ஆளும் கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவரான ரவுத் நேற்று(செப்.28) நேரில் சந்தித்து பேசியுள்ளார். சிவ சேனா கட்சியின் ஆதிகாரப்பூர்வ இதழான 'சாம்னா'வுக்காக பேட்டியெடுக்க சஞ்சய் ரவுத் அவரை சந்தித்ததாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நேர்காணலில் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேசப்பட்டதாகவும், வேறு எது தொடர்பாகவும் பேசப்படவில்லை என ரவுத், ஃபட்னாவிஸ் இருவரும் கூட்டாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், "எதிரும், புதிருமான இரண்டு அரசியல் கட்சிகளின் உயர் மட்ட தலைவர்கள் திடீரென சந்தித்ததால், தற்போது அரசியல் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இது மாநில அரசியலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த சந்திப்பானது, ஊடக சந்திப்பாக மட்டுமே இருந்தது" என கூறினார்.