பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடன் மோசடி செய்து நிரவ் மோடி லண்டனுக்கு தப்பியோடினார். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட தலைமறைவு நிதிமோசடியாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் சொத்து பறிமுதல் செய்ய அனுமதி வழங்கியது இதுவே முதல்முறை. கடன் வாங்கிவிட்டு தப்பியோடினால் வங்கியில் அடமானம் வைக்காத சொத்துகளையும் பறிமுதல் செய்ய இது வழிவகை செய்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவிற்கு அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.