பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுகொண்டு அதனை திரும்ப செலுத்தாமல் வங்கி மோசடியில் வைர வியாபாரி நிரவ் மோடி ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். பின்னர், அமலாக்கத் துறையினர் கொடுத்த புகாரின்பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்துவருகிறது. இந்த வங்கி மோசடி வழக்கில், நிரவ் மோடிக்கு அவரின் சகோதரர் நேஹல் மோடி உதவியதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக உலக நாடுகளுக்கு இந்தியா கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் எனப்படும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டைச் சேர்ந்த குற்றவாளி வேறு நாட்டிற்கு தப்பியோடினால், அந்நாட்டு காவல் துறை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும். இதுவே ரெட் கார்னர் நோட்டீஸ் ஆகும்.