டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் காற்றின் மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுமான தொழில்களை மேற்கொள்ளவும், விவசாயக் கழிவுகளை எரிக்கவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
இந்நிலையில், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளுடன் சேர்ந்து பிரதமர் அலுவலகம் மாசு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் மாசுவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாநில அரசுகள் சார்பாக பங்கேற்ற உயர் அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
குறுகிய காலத்திற்கான திட்டங்களை உடனடியாக அமல்படுத்த பிரதமர் அலுவலக தலைமைச் செயலர் பி.கே. மிஸ்ரா உத்தரவிட்டார். விவசாயக் கழிவுகள் எரிப்பதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்கவும் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காற்று மாசால் பாதிக்கப்பட்ட இடங்களில், தண்ணீர் தெளிக்கப்பட்டுவருவதாக டெல்லி தலைமைச் செயலர் விஜய் தேவ் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்குக் கருணை காட்டமாட்டோம் - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்