பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை அருகேயுள்ள கோவளம் தாஜ் ஓட்டலில் இன்று காலை இருவரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பு கண்ணாடி அறைக்குள் நடந்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கண்ணாடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தனர்.
தொடர்ந்து வங்கக் கடல் அழகை ரசித்தப்படி வெளியில் வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் நடந்தவாரே பேசிக் கொண்டு சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் சென்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாட்டு எல்லைச் சிக்கல், பாதுகாப்பு, வர்த்தகம், சில முக்கிய பிரச்னைகள் குறித்து பேசியதாகக் கூறப்படுறது. ஆசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு 3500 கிலோ மீட்டர் உள்ள இந்திய- சீன எல்லைகள் குறித்த பேச்சு முக்கிய நிகழ்வாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருநாட்டுக் குழுவினரும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் இதில் பங்கெடுத்துள்ளனர்.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம் குறித்து பேசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்கலாமே