ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து விவசாயிகளிடையே உரையாற்றும் மோடி!

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தில் நடைபெறும் கிசான் கல்யாண் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே உரையாற்றுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
author img

By

Published : Dec 18, 2020, 8:03 AM IST

போபால்: மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.

விவசாயிகள் தொடர் போராட்டம்

மத்தியில் ஆளும் பாஜக அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யுமாறு, நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் கோரிக்கைவைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கொரி டெல்லி எல்லைப் பகுதியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள் கடந்த 22 நாள்களாகத் தொடர் பேராட்டங்களில் ஈடுபட்டும், சாலைகளை முடக்கி முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.

மத்திய அரசுத் தரப்பில் விவசாய சங்கங்களுடன் மேற்கொண்ட பலகட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தில் நடைபெறும் கிசான் கல்யாண் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே உரையாற்றுகிறார்.

கிசான் கல்யாண் திட்டம்

ரைசன் மாவட்டத்தில் மாநில அளவிலான 'கிசான் கல்யாண்' நிகழ்வை மத்தியப் பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில், ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிவாரண தொகையை சேதமடைந்த காரீப் பயிர்களுக்கு கிட்டத்தட்ட 35.50 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் முதலமைச்சர் சிவராஜ் சிங் மாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரைசனில் நடைபெறும் மாநில அளவிலான இந்த நிகழ்ச்சியில் சுமார் 20,000 விவசாயிகள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து பேசும் பிரதமர் மோடி:

இந்நிகழ்ச்சியல் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உரையாற்றிய பின்னர், பிற்பகல் 2 மணியளவில் காணொலி வாயிலாக, புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளிடையே விரிவாக விளக்குவார் என்றும் மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான கைப்பேசிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.