அகமதாபாத்: நாட்டிலே முதல் முறையாக குஜராத்தில் நீர் வழி விமான சேவை தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அக்.31இல் தொடங்கிவைத்தார்.
முன்னதாக அவர் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சபர்மதி-கெவாடியா இடையே நீர்வழி விமான போக்குவரத்தை தொடங்கிவைத்தார்.
இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் வந்துள்ளார். தன்னுடைய முதல் நாள் பயணமான நேற்று, பிரதமர் ஆரோக்கிய வான், ஏக்தா மால், குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா, சர்தார் படேல் விலங்கியல் பூங்கா (ஜங்கிள் சஃபாரி), மற்றும் படகு சவாரி உள்ளிட்ட 17 புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.