காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அடுத்த 30 முதல் 60 நாள்களில் திட்டம் வகுக்க மோடி முன்வர வேண்டும். அதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும். பிரித்தாலும் சூழ்ச்சியை கைவிட்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் அவர் அழைத்தச் செல்ல வேண்டும்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனால், மோடி இதுகுறித்து தொடர்ந்து அமைதி காத்துவருகிறார். இதனால், வெகுஜன மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 7.35 விழுக்காடு உயர்ந்தது. முக்கியமாக வெங்காய விலையின் உயர்வே இதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: உறுதியானது ட்ரம்ப்பின் இந்திய வருகை?