ETV Bharat / bharat

கோவிட் -19 தனிமைப்படுத்தல் வழிமுறைகளை பகிர்ந்த பிரதமர்! - கோவிட்-19 (கொரோனா) வைரஸ்

டெல்லி: கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டவரை வீட்டில் எவ்வாறு தனிமைப்படுத்தலாம் என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை பகிர்ந்த அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

PM shares health ministry's guidelines on home quarantine

author img

By

Published : Mar 15, 2020, 2:14 AM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட்-19 வைரஸ் தொற்றினால் இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கலாம் என்ற அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதற்காக இவற்றை பின்பற்றவும்....!

  • வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் நன்கு காற்றோட்டமான ஒற்றை அறையில் தங்க வேண்டும்.
  • வாய்ப்பிருந்தால் தனிப்பட்ட கழிப்பறையை உபயோகிக்கவும்.
  • மற்றொரு குடும்ப உறுப்பினர் ஒரே அறையில் தங்க வேண்டியிருந்தால், இருவருக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிப்பது நல்லது.
  • தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும்.
  • சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும்
  • பாதிக்கப்பட்டவர்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
  • எல்லா நேரத்திலும் அறுவை சிகிச்சை முகமூடியை அணிய வேண்டும் முகமூடியை ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்கு மாற்றி அணிய வேணும்” என அறிவுறுத்தியுள்ளது.

இந்த பதிவை பிரதமர் நரேந்திர மோடி “இங்கே உள்ள முக்கியமான தகவல்களை படிக்கவும்” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க....வீட்டில் சகோதரியின் சடலத்துடன் ஒரு வாரம் தங்கியிருந்த அண்ணன்: இத்தாலியில் அவலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.