சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பட்டுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவல், கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து பேசப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க...தப்லிஹி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்