ETV Bharat / bharat

ஐநா அமைப்பின் பொதுச்சபைக் கூட்டத்தில் மோடி இன்று உரை! - ஐநாவில் நரேந்திர மோடி உரை

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றவிருக்கிறார்.

narendra modi
author img

By

Published : Sep 27, 2019, 11:16 AM IST

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பேசவிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று மாலை நடைபெறும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இரவு 8 மணியளவில் மோடி பேசவுள்ளார்.

பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மோடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேசவிருக்கிறார். காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ள நிலையில், இம்ரான் கான் இந்த விவகாரம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காஷ்மீர் பிரச்னை குறித்து பிரதமர் மோடி பேசமாட்டார் என இந்தியா ஏற்கனவே உறுதிபடுத்திவிட்டது.

மேலும், இதற்கு முன் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் 2014ஆம் ஆண்டு மோடி பேசியுள்ள நிலையில், இன்று அவர் இரண்டாவது முறையாக பேசவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐநாவில் எழுப்பப்படும் காஷ்மீர் பிரச்னை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.