ETV Bharat / bharat

பிரதமரின் இணையதள ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்! - Twitter hacked

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் இணையதள ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

modi
modi
author img

By

Published : Sep 3, 2020, 8:30 AM IST

Updated : Sep 3, 2020, 12:44 PM IST

பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான நரேந்திர மோடி (narendra modi_in) என்ற ட்விட்டர் கணக்கு இயங்கி வருகிறது. இதனை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த இணையதள ட்விட்டர் கணக்கை இன்று (செப்.3) அதிகாலை ஹேக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர். அதனோடு, சில பதிவுகளையும் பதிவிட்டுள்ளனர்.

இதில், "கோவிட் -19 பாதிப்பிற்கு பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு எல்லோரும் தாராளமாக நிதியுதவி செலுத்துங்கள். இந்தியாவில் தற்போது கிரிப்டோகரன்சி முறை தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகையால், பிட்காயின் மூலம் நிவாரணம் அளிக்கவும் என்று பதிவிட்டுள்ளனர். "இந்த (மோடியின்-) கணக்கை ஜான் விக் (hckindia@tutanota.com) ஹேக் செய்துள்ளார்.

ஹேக் செய்யப்பட்ட ட்வீட்
பிரதமரின் இணையதள ட்விட்டரில் ஊடுருவி ஹேக்கர்கள் வெளியிட்ட ட்வீட்!

நாங்கள் பேடிஎம் மால் தளத்தை ஹேக் செய்யவில்லை" என்று கூறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ட்விட்டர் நிறுவனம் உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மோடியின் இணையதள ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் பதிவிட்ட ட்வீட்கள் நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்விட்டர் தள செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் கூறியதாவது, "மோடியின் இணையதள ட்விட்டர் கணக்கு முழுமையாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிற்கும், பிரதமரின் அலுவலக ட்விட்டர் கணக்கிற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. வேறு ஏதேனும் குளறுபடிகள் நடந்துள்ளனவா என்று விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார். இதுபோன்று, முன்னதாக கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் நிறுவன தலைவர், அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபடும் ஹேக்கர்கள் வாயிலாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தங்கம் வென்ற செஸ் வீராங்கனை துரோணாவள்ளி ஹரிகாவின் சிறப்பு பேட்டி

Last Updated : Sep 3, 2020, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.