ETV Bharat / bharat

வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாயக் கட்டமைப்பை அழித்துவிடும் - ராகுல் காந்தி - வேளாண் சட்டங்கள்

சண்டிகர் : வேளாண் சட்டங்களை கருப்பு சட்டங்கள் எனக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அவை நாட்டின் விவசாயக் கட்டமைப்பை அழித்துவிடும் என விமர்சித்துள்ளார்.

ராகுல்
ராகுல்
author img

By

Published : Oct 6, 2020, 6:07 PM IST

கடந்த 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.

  • விலை உறுதியளிப்பு, பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்.
  • விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம், வர்த்தக (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்
  • அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்.

இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் நான்காம் தேதி தொடங்கி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ராகுல் காந்தி இந்தப் பேரணிகளில் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை விமர்சித்துப் பேசி வருகிறார். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிய மூன்று கருப்பு சட்டத்திற்கு எதிராகப் பேரணிகளை நடத்தி வருகிறோம்.

நாட்டின் வேளாண் துறையையும் உணவுப் பாதுகாப்பையும் இந்த மூன்று சட்டங்களும் சீரழித்துவிடும். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். இந்தக் கட்டமைப்பு பஞ்சாபில் உடைந்துவிட்டால் மாநிலத்திற்கு எதிர்காலமே கிடையாது.

முதலில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதனை அடுத்து அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிக் கொள்கை, கரோனா காலம் என எதுவுமே விவசாயிகளுக்கு உதவவில்லை. இந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளுக்கு எதிராக மத்தியஅரசு தாக்குதல் நடத்தியுள்ளது." என தெரிவித்தார்.

பஞ்சாப்பைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்திற்கு செல்லும் ராகுல் காந்தி அங்கு நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.