ETV Bharat / bharat

இருதயத்தால் பிணைந்த நண்பன் மோடி! - ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி

சென்னை: நரேந்திர மோடியும் தானும் சஹ்ருதயா (சக இருதயம்) கொண்ட நண்பர்கள் போல் பேசிக் கொண்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Modi xi jinping
author img

By

Published : Oct 12, 2019, 1:27 PM IST

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இருவரும் கண்ணாடி அறைக்குள் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இருநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தை ஜின்பிங், மோடி தலைமையில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். மேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தக உறவு இருந்ததை நினைவுப்படுத்தினார்.

"இந்தியா-சீனா உறவு நிலைத்ததன்மையுடன் இருக்கிறது. அதேபோல் தமிழ்நாடு-சீனா இடையேயும் பண்பாடு கலந்த வர்த்தக உறவு இருக்கிறது. உலகின் சிறந்த பொருளாதார சக்தியாக இந்தியாவும் சீனாவும் இருக்கிறது. இந்தச் சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு உறவுகளும் புதிய அத்தியாயம் படைக்கும்" என்று மோடி தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "இந்தியாவில் எனக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விருந்தோம்பலும் சிறப்பாக இருந்தது. எனக்கும் எனது குழுவினருக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் நானும் இருதயப்பூர்வமான நண்பர்கள் போன்று பேசிக் கொண்டோம். இருநாட்டு உறவுகளும் வலுப்பெறும்" என்றார்.

இதையும் படிக்கலாமே

நரேந்திர மோடி- ஜி ஜின்பிங் கண்ணாடி அறையில் பேச்சுவார்த்தை

Intro:Body:

Kovalam (Tamil Nadu): Delegation level talks begin between Indian and China. PM Narendra Modi, National Security Advisor (NSA) Ajit Doval, External Affairs Minister S. Jaishankar, Foreign Secretary Vijay Gokhale are present.

PM Narendra Modi: There have been deep cultural and trade relations between China and the state of Tamil Nadu. For most part of the last 2000 years, India and China have been economic powers

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.