நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தியானது மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பலரும் விநாயகர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.
![அமைச்சர் அமித்ஷா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4317333_pm.jpg)
இதைத் தொடர்ந்து "நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் என் இதயம் நிறைந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்" என ட்விட்டரில் பதிவு செய்தார். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை ட்வீட் செய்துள்ளார்.