திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 71 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டுவரும் பணி 24 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, "துணிச்சலான இளம் சுஜித்தை மீட்க பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தேன்.
சுஜித் பாதுகாப்பாக இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.