இதுதொடர்பாக பாஜக வெளியிடுள்ள அறிக்கையில், " முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளுடன் உரையாடவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் தூண்டுதலால் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில், விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். நாடுமுழுவதும், இந்தப்போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், அடையாள உண்ணாவிரதங்கள் உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடவுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'வேளாண் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை விவசாயிகள் படிக்கவேண்டும்' -பிரதமர் மோடி