பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் 2014ஆம் ஆண்டு முதல் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில், இன்று (டிச.27) காலை 11 மணிக்கு மக்களுடன் உரையாற்றுகிறார். இது 2020ஆம் ஆண்டிற்கான கடைசி உரை என்பதால், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மன் கி பாத் நிகழ்ச்சியில், உங்கள் (குடிமக்களின்) யோசனைகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் செய்தியை பதிவு செய்யுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.
அதையடுத்து, தற்போது கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், புதிய வேளாண் சட்டம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரச்னைகள் குறித்து மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கூழாங்கல் கலையின் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனம் - மகாராஷ்டிரா இளைஞரின் புதிய முயற்சி