ETV Bharat / bharat

ஹேக்கத்தான் போட்டி: மாணவர்களிடையே உரையாற்றவுள்ள மோடி - ஹேக்கத்தான் போட்டி

டெல்லி: ஹேக்கத்தான் இறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 1) நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

மோடி
மோடி
author img

By

Published : Aug 1, 2020, 2:48 PM IST

பிரச்னையை தீர்க்கும் மனநிலையை மாணவர்களிடையே உருவாக்கும் நோக்கில் ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. 2020ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதனிடையே, இறுதிப் போட்டியாளர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இன்று மாலை 4:30 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் உள்ள இளைஞர்கள் திறமைமிக்கவர்கள். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டியின் மூலம் மாணவர்களின் சிறப்பான கண்டுபிடிப்பு திறன் வெளிப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளை வடிவமைக்க ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி தளமாக விளங்குகிறது. ஆத்மநிர்பார் பாரத் திட்டம், கரோனாவுக்கு பிறகான உலகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கிலான கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் கவனம் செலுத்துவர்" என பதிவிட்டுள்ளார். பரந்த சிந்தனையை மாணவர்களிடையே ஊக்குவிப்பதில் ஹேக்கத்தான் போட்டி வெற்றி அடைந்துள்ளது என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போட்டியில் 42,000 மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். 2019ஆம் ஆண்டு, கலந்துகொள்வோரின் எண்ணிக்கை இரண்டு லட்சமாக உயர்ந்தது. இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் 4.5 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் விபத்து; 10 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.