ETV Bharat / bharat

'முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி'- பிரதமர் நரேந்திர மோடி! - பிரதமர் நரேந்திர மோடி உரை

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றுகையில், “முன்னேறி செல்ல சீர்திருத்தம் ஒன்றே வழி” என்றார்.

PM Modi புதிய கல்விக் கொள்கை National Education Policy முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி பிரதமர் நரேந்திர மோடி உரை தேசிய கல்விக் கொள்கை

author img

By

Published : Aug 7, 2020, 11:59 AM IST

டெல்லி: 'தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள்' என்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆக.7) உரை நிகழ்த்தினார்.

அப்போது, “முன்னேறி செல்ல சீர்திருத்தம் ஒன்றே வழி” என்று கூறினார். தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து ஆற்றிய உரை வருமாறு:

பல ஆண்டுகள் ஆய்வுக்கு பின்னர் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் கேட்டறிந்த பிறகே தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையில் எவ்வித பாகுபாடும் இல்லை.

தேசிய கல்விக் கொள்கை நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கஸ்தூரி ரங்கன் குழுவின் ஆலோசனையின்படி கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது சவால் நிறைந்த பணியாக இருக்கும். கல்வித் துறையில் வரும் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தமடைந்துள்ளனர்.

இந்தியாவை வலிமையான நாடாக்க புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித் துறையை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும்.

முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. அதற்கு தேசிய கல்விக் கொள்கை உதவிகரமாக இருக்கும். மாணவர்களின் கற்பனை திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது.

அந்த வகையில், அனைவரும் தாய்மொழியில் சிறப்பாக கல்வி கற்கலாம். தேசிய கல்விக் கொள்கையில் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி அனைவருக்கும் கட்டாயம்.

எதிர்காலத்துக்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்பதை இந்தக் கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. பாடங்களை படிப்பதை விட அதுகுறித்து கேள்வி கேட்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது.

மேலும் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச குடிமகன்களாக நாம் இருக்க வேண்டும். ஆனாலும் நமது வேர்களை மறக்கக் கூடாது.

நல்ல குடிமக்களை உருவாக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டுமானால், மாணவர்கள் சமூக சூழ்நிலையோடு ஒன்றி கல்வி கற்க வேண்டும். தொழில்நுட்பத்தின் உதவியால் நாட்டின் கடைகோடியிலுள்ளவர்களுக்கும் கல்வியை கொண்டு செல்ல முடியும்.

திறமை, தொழிற்நுட்பம் ஆகியவை நமது நாட்டின் வளங்கள். மேலும், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு இடையே இடைவெளி குறைக்கப்படும். இதனை தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.

தேசிய கல்விக் கொள்கை 21ஆம் நூற்றாண்டின் அடித்தளம். பள்ளிக் கல்வியை புதிய கல்வி முறையில் வடிவமைப்பது நமது மாணவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். முன்னேறி செல்ல சீர்திருத்தம் ஒன்றே வழி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க நாடு தயாராக வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த உரையை வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழங்கினார். இந்த மாநாட்டுக்கு பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ் உயர்கல்வியின் பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை - விழிப்புணர்வு ஏற்படுத்த யூஜிசி கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.