நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 38 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 618ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 816ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாடு தெலங்கானா, ஆந்திரா, அசாம், பிகார், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர்களுடன் இன்று(ஜூலை 19) தொலைபேசியில் பேசினார்.
அப்போது, அந்தந்த மாநிலங்களின் கரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அசாம், பிகாரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.