கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் கரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி தவித்துவருகின்றன. இந்நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பிரதமரின் முதன்மைச் செயலர் பிரமோத் குமார் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டின் நிலை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பின் மூத்த உறுப்பினர் வினோத் பால் ஆலோசனைக் கூட்டத்தின் போது சமர்பித்தார்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றில் இருவர் ஐந்து மாநிலத்தைச் சேர்ந்தவராக உள்ளார்கள் எனவும் அதிலும் பெரும்பான்மையானவர்கள் பெரு நகரங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.