குடியுரிமை திருத்த மசோதா 311 உறுப்பினர்களின் ஆதரவோடு மக்களவையில் டிசம்பர் 9ஆம் தேதியும், 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் டிசம்பர் 11ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மசோதா சட்டமானது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம், "பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் அகதிகளுக்கு மோடி கடவுள் போன்று தெரிகிறார். இறந்தால் கூட பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்ப மாட்டோம் என அவர்கள் தெரிவித்திருந்தனர். குடியுரிமை வழங்கப்பட்டதால் அவர்களுக்கு புது வாழ்க்கை கிடைத்துள்ளது.
மக்களிடையே காங்கிரஸ் கட்சிதான் குழப்பம் ஏற்படுத்துகிறது. பிரச்னை குறித்து வீடியோ போடுவதற்கு பதில் சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் சட்டம் குறித்து பேசியிருக்கலாம். ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு இந்தியாவில் உள்ள அகதிகளின் அவல நிலை குறித்து தெரியுமா? " என்றார்.
இதையும் படிங்க: அனுமதி மறுக்கப்பட்ட மாணவி; ஆதரவாக குரல் கொடுத்த சிதம்பரம்!