ETV Bharat / bharat

மீன்வளத்துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடித் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்!

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Sep 10, 2020, 4:49 PM IST

தற்சார்பு இந்தியா பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மீன்வளத்துறை சார்ந்த புதியத் திட்டத்தை இன்று(செப்.9) தொடங்கிவைத்தார்.

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற மோடி, ரூ.2 ஆயிரம் கோடியில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா திட்டம் என மீன்வளத்துறைக்கு புதியத் திட்டமும், ரூ.85 கோடியில் இ-கோபாலா என கால்நடைவளர்ப்புக்கு புதிய திட்டமும் தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய மோடி, இதுவரை இல்லாத அளவுக்கு மீன்வளத்துறைக்கு முதலீடு செய்துள்ளதாக தெரிவித்த மோடி வரும் 2024-25ஆம் ஆண்டுக்குள் மீன் உற்பத்தியை 70 லட்சம் டன்னாக அதிகரித்து, அதன் மூலம் ஏற்றுமதி வருவாயை ரூ.1 லட்சம் கோடியை உயர்த்த திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் நவம்பர் காலகட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு புதியத் திட்டங்களை மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'இளைஞர்கள் வேலையிழந்ததற்கு மோடி அரசே காரணம்' - ராகுல் காந்தி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.