ETV Bharat / bharat

மோடி மனக்குரலில் ஒலித்த பாரதியார் பாடல் - Modi Bharathiyar song man ki baat

டெல்லி: மகாகவி பாரதியின் 'முப்பது கோடி முகமுடையாள்' பாடலை தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் மேற்கோள்காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மோடி
author img

By

Published : Nov 24, 2019, 2:18 PM IST

இரண்டாம் முறை பதவியேற்றபின் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் மீது அதிகம் பாசம் காட்டிவருகிறார். செல்லுமிடமெங்கும் பிரதமர் மோடியின் நாவில் தமிழ் மொழி தாண்டவமாடத் திருக்குறள், புறநானூறு எனச் சங்கத் தமிழைத் தனது உரைகளில் தூவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இவரின் இந்த செயல்களால் தமிழ்நாடு பாஜக புலங்காகிதமடைந்து தமிழ் காக்க வந்த தலைமகன் என்றளவிற்கு ட்விட்டரில் போற்றிப் பாடிவருகிறது.

தமிழ்நாடு பாஜக ட்வீட்
தமிழ்நாடு பாஜக ட்வீட்

இந்தப்பாட்டுக்கு இசைப்பாட்டு பாடுவது போல மனதின் குரல் நிகழ்ச்சியில் பாரதியார் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார், பிரதமர் மோடி. மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் மோடி அந்த உரையில், 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குறிப்பிடும் விதமாக பாரதி பாடிய இப்பாடலைத் தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார்.

அத்துடன், அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் நாட்டில், நீதித்துறை மீதான நம்பிக்கையை உறுதிபடுத்தியுள்ளது என்ற மோடி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் போன்ற ஒழுக்கங்களே மேலானது எனவும் தெரிவித்துள்ளார்.

மோடி மேற்கோள் காட்டிய பாரதி பாடலின் முழுவரிகள்:

'முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்'

இதையும் படியுங்க: மகாராஷ்டிராவில் விநோத காரணம் சொல்லி விடுப்பு கேட்ட பேராசிரியர்!

Intro:Body:

'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு அயோத்தி தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி #PMModi | #Ayodhya

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.