தேசிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (செப்டம்பர் 11) உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு மதிப்பெண் பற்றிய அழுத்தம் நீங்க வேண்டும். மதிப்பெண்களை தங்கள் குடும்ப கவுரவமாக பார்க்கும் மனோபாவம் மாறவேண்டும்.
அதை நோக்கியே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு பாடச் சுமையை குறைத்து, அவர்களை உற்சாகமாக கற்க ஏதுவாக புதிய கல்விக் கொள்கை தயாராகியுள்ளது. புதிய கல்வித் திட்டமானது எதிர்காலத் தேவை பூர்த்தி செய்து விஞ்ஞான ரீதியான மேம்பாட்டை நோக்கிய மாணவர்களை கொண்டுச் செல்லும். மொழி என்பது கற்பதற்கான கருவியாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே கல்வியாக மாறிவிடக் கூடாது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக இதுவரை சுமார் 15 லட்சம் கருத்துகள் அரசுக்கு வந்துள்ளன என பிரதமர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அட்டகாசமான சாதனம்!