ETV Bharat / bharat

மோடி படம் வெளியாகுமா? முடிவை கூறுகிறது தேர்தல் ஆணையம்

டெல்லி: ’பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் வெளியாகுமா என்பது குறித்த தனது முடிவை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் கூறஉள்ளது.

Narendra modi
author img

By

Published : Apr 19, 2019, 11:18 AM IST

Updated : Apr 19, 2019, 11:50 AM IST

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாக இருந்த சூழலில் தேர்தலை மனதில் வைத்துதான் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது எனவே இதனை உடனடியாக தடை செய்யவேண்டும் என காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

இதனையடுத்து அத்திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தொடர்ந்து படத் தயாரிப்பு தரப்பில் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ’பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தடை செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தது. இதனால், ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த புதன் கிழமை திரையிட்டு காட்டப்பட்டது.

இந்நிலையில், இத்திரைப்படத்தை வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்த முடிவை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவிக்க உள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 19, 2019, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.