பிகார் மாநிலத்தில் வரும் அக்டோபர்-நவம்பர் மாத காலகட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பல்வேறு புதிய நலத்திடங்களை மத்திய அரசு கடந்த சில நாள்களாக அறிவித்துவருகிறது.
அதன்டி, பிகார் மாநிலத்தை வட கிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் விதமாக கோசி ரயில்வே பாலத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப் 18) காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
516 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பாலத்திற்கான திட்டப் பணிகள் 2003-04 காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துடன் சேர்த்து 12 புதிய ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
1.9 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம் இந்திய ரயில்வே சாதனைகளில் ஒரு மைல் கல், இதில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துகள் எனத் திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய ரயில்வேத் திட்டம் அம்மாநிலத்தில் உள்ள புத்த, ஜைன தளங்களுக்கு பயணம் மேற்கொள்ள எளிமையாக்குகிறது. மாநில சுற்றுலா துறை இதன் மூலம் மேம்படும் என பிகார் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மேல் வருவாய் ஈட்டும் பி.டெக் முடித்த ஹை-டெக் விவசாயி...!