பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது 78ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் அவரை நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ ஆசீர்வதிப்பாராக!” எனத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் உள்ளது. பாஜகவினர் குதிரைபேரத்தில் ஈடுபடுகின்றனர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
அடுத்து ராஜஸ்தானிலும் இதே நிலை தொடரும் என்று யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியாகிவருகின்றன. இது காங்கிரசில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் முதலமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷா, நட்டாவுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை