ETV Bharat / bharat

தேச ஒற்றுமைக்கான பாடல் பாடிய கேரள சிறுமி : பாராட்டிய பிரதமர் மோடி! - மோடி தற்போதைய செய்தி

டெல்லி : "ஏக் பாரத்ஷ் ரேஷ்த் பாரத்" என்ற இமாச்சலப் பகுதிகளில் பாடப்படும் பாடலை பாடிய கேரளாவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Prime minister congratulates Kerala girl

author img

By

Published : Oct 10, 2020, 6:18 PM IST

கேரளாவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி தேவிகா. கடந்த சில நாள்களுக்கு முன், இவரது மழலை குரலில் ”ஏக் பாரத் ஷ்ரேஷ்த் பாரத்” என்ற இமாச்சலப் பகுதிகளில் பாடப்படும் பாடலை பாடி இவர் வெளியிட்ட வீடியோ, இணையதளம் முழுவதும் வைரலானது.

தேவிகாவின் இந்தப் பாடல் வீடியோவை இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தேவிகாவை பாராட்டி தற்போது பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தேவிகாவைக் கண்டு நான் பெருமை கொள்கிறேன். அவரது மழலைக் குரல், ’ஒரே இந்தியா சிறந்த இந்தியா’ என்ற கருத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தேவிகா கூறுகையில், "என்னால் இதை நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் பாடலை நான் பாடிய போது பிரதமர் என்னை வாழ்த்துவார் என்று ஒருபோதும் நினைக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக கேரள மாநிலத்தின் கலாச்சாரத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன், தேவிகாவை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.