கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்திற்கு ரூ. 3,100 கோடி ஒதுக்க பி.எம் கேர்ஸ் ஃபண்ட் அறக்கட்டளை இன்று (மே 13) முடிவு செய்துள்ளது என பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
அறக்கட்டளை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 3,100 கோடியில், வென்டிலேட்டர்கள் வாங்குவதற்காக ரூ. 2,000 கோடியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பராமரிப்புக்காக ரூ. 1,000 கோடியும் செலவிடப்படும். கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு கூடுதலாக ரூ. 100 கோடி வழங்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளை பிரதமர் தலைமையில் இயங்கிவருகிறது. அறக்கட்டளையின் மற்ற நிர்வாகிகளாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.