ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி நதியின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஒரு பழைய கட்டடமும் இரண்டு கூரைகளும் இடிந்து விழுந்தன. ஹைதராபாத்தில் வீடுகளுக்குள்ளேயும் வெள்ளம் புகுந்தது. அதுமட்டுமின்றி மழை வெள்ளத்தால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மழைக்குப் பிந்தைய நிலைமை, மீட்புப் பணிகள் குறித்து தெலங்கானா, ஆந்திர முதலமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி விசாரித்துள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “தெலங்கானா முதலமைச்சர் கேசிஆரிடமும், ஆந்திரா முதலமைச்சர் ஜெகனிடமும் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழைப் பாதிப்பு குறித்து கேட்டறிந்தேன்.
மீட்பு, நிவாரண பணிகளைத் தீவிரப்படுத்தவும், அதற்கான உதவிகளை வழங்குவது குறித்தும் உறுதிப்படுத்தினேன். தற்போது என்னுடைய சிந்தனை எல்லாம் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்துதான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க...ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: நிலைமையை கண்காணிக்கும் மத்திய அரசு!