ETV Bharat / bharat

’கரோனா வர்க்க ரீதியான பாகுபாடு காட்டவில்லை: விளைவுகள் வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறது’

author img

By

Published : May 18, 2020, 10:35 AM IST

ஹைதராபாத்: கரோனா வைரஸ் (தீநுண்மி) பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பாகுபாடு காட்டவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகவும் சீரற்றவை. அதிகம் பாதிக்கப்படுவது விளிம்புநிலை மக்கள்தான்.

கரோனா
கரோனா

சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமூகத்தில் கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள தற்போதைய இடைவெளி, கோடிக்கணக்கான மக்கள் சந்திக்கும் வறுமை போன்ற நெருக்கடிகளைச் சமாளிப்பது இந்த காலக்கட்டத்தில் மட்டுமில்லாமல், எதிர்காலத்திலும் எதிரொலிக்கலாம் எனத் தெரியவருகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் இந்த நெருக்கடி உண்டாக்கும் சிக்கல் குறித்து அதில் தெளிவாக விளக்கப்பட்டது.

”சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள தரமான சுகாதாரத்திற்கான நிதி தடைகளை நீக்குதல், முறைசாரா பொருளாதாரத்தில் தொழிலாளர்களைச் சென்றடைதல், வேலைகளையும், அதனால் கிடைக்கும் வருமானத்தையும் பாதுகாத்தல், சமூகப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பிற தலையீடுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட செயலாக்கங்களை சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆராய்கிறது.

தீநுண்மி பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பாகுபாடு காட்டவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகவும் சீரற்றவை. அதிகம் பாதிக்கப்படுவது விளிம்புநிலை மக்கள்தான். மலிவு, தரம், சுகாதாரத்தை அணுகும்திறன் போன்றவை வாழ்வதற்கும், உயிரிழப்பதற்கும் இடையில் இருக்கின்றன.

கரோனாவை ஒருமுகப்படுத்தப்படுவதைத் தவிர்க்குமாறு கொள்கை வகுப்பாளர்களை இந்த அறிக்கை எச்சரிக்கிறது. கரோனாவில் மட்டும் கவனம் செலுத்துவது மலேரியா, காசநோய், ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ் ஆகியவற்றால் உயிரிழப்பு அதிகரிப்பதற்கான உதாரணங்கள் பட்டவர்த்தனமாகக் காட்டப்படுகின்றன.

உலக மக்கள்தொகையில் 55 விழுக்காடு (நான்கு பில்லியன் மக்கள்) சமூக காப்பீடு அல்லது சமூக உதவியால் பயன்பெறவில்லை. உலகளவில், வேலையில்லாதவர்களில் 20 விழுக்காடு மட்டுமே வேலையின்மை சலுகைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பிராந்தியங்களில் பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது.

பாதுகாப்பு இடைவெளிகளில் இரண்டு முக்கிய பாதகமான விளைவுகளை கரோனா நெருக்கடி காட்டியிருக்கிறது.

  • முதலாவதாக, இத்தகைய பாதுகாப்பு இடைவெளிகள் மக்கள் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தலாம்.

இதனால், மற்றவர்களுக்கு பெருந்தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

  • இரண்டாவதாக, வருமான இழப்பு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வறுமைக்கான இடரை அதிகரிக்கிறது,

இது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” என அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமூக பாதுகாப்புத் துறையின் இயக்குநர் ஷாஹ்ரா ராசாவி, ”கரோனா நெருக்கடி விழித்தெழுவதற்கான அழைப்பு. சல்லடைத்துளைகள் போல சமூக பாதுகாப்பில் இருக்கும் விரிசல்கள் ஏழைகளை மட்டுமல்லாது ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் அடையும் பாதிப்பையும் காட்டுகிறது. எவ்வாறெனில், மருத்துவச் செலவு, வருமான இழப்பு போன்றவை சேமிப்பை எளிதில் அழிக்கக்கூடும்” என்றார்.

ஒரு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை வலிமையாகக் கொண்ட நாடுகள் அவசியம் என்பதை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் உணர்ந்துவருகின்றன.

எதிர்கால நெருக்கடிகளுக்கு ஆயத்தமாக இருப்பதை உறுதிசெய்ய, சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவம், ஒரு சமூகமாக அதில் முதலீடு செய்வதன் அவசரம் குறித்த பொது விழிப்புணர்வைக் கொள்கை வகுப்பாளர்கள் உருவாக்கினால் நெருக்கடியைத் தளர்க்கலாம்.

இதையும் படிங்க: பெருந்தொற்றை சமாளிக்க ஒபாமாவிடம் போதிய செயல்திட்டம் இல்லை- வெள்ளை மாளிகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.