உலகைச் சூறையாடிவரும் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை வாங்க மாட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும், ஊரடங்கை மீறி மக்கள் பொறுப்பின்றி சுற்றித்திரியும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறுகின்றன.
இந்தச் சூழலில், ஊரடங்கை முறையாக அமல்படுத்த அனைத்து மாநிலங்களிலும் ராணுவத்தைக் களமிறக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினரை அடையாளம் தெரியாத கும்பல்கள் குற்றஞ்சாட்டியுள்ள மனுதாரர், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வழிமுறை, வியூகம் அமைக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில், மக்கள் அதிகம் கூடிய சம்பவம் குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மத்திய அரசு அறிவிப்பால் அதிருப்தி அடைந்த அமேசான் நிறுவனம்